தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி + "||" + Maharastra Man gets final Covid-19 vaccination certificate without receiving second dose

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போடாமல், சான்றிதழ் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி
2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது.
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது29). இவர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டு இருந்தார்.

இந்தநிலையில் 2-வது டோஸ் தடுப்பூசி போடும் முன்பே, கடந்த புதன்கிழமை மாலை 4.17 மணியளவில் வாலிபருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.

மேலும் அதில் இருந்த லிங்கை கிளிக் செய்த போது, வாலிபர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் தடுப்பூசி மையத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் கடந்த புதன்கிழமை அங்கு தடுப்பூசி முகாம் நடக்கவே இல்லை என கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவ்சா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அன்காத் ஜாதவிடம் கேட்ட போது, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் செல்போன் எண்ணை தவறாக பதிவு செய்ததால் இந்த தவறு நடந்து இருக்கலாம், என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 832 பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் இன்று மேலும் 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பஸ் ஊழியர்கள் இடைநீக்கம்
மராட்டியத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 3 ஆயிரத்து 10 பஸ் ஊழியர்கள் இடைநீக்கம் செய்ய்பட்டனர். இதுவரை 18 ஆயிரம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.
4. மராட்டியத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
மராட்டிய மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
5. 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.