தேசிய செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 30 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளி தாய்மாமனுக்கு மரண தண்டனை + "||" + Man sentenced to death on 30th day after raping, killing 7-yr-old girl

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 30 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளி தாய்மாமனுக்கு மரண தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 30 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளி தாய்மாமனுக்கு மரண தண்டனை
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சிறுமியின் தாய்மாமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20-ம் தேதி காணமல் போனது. 

இதனை தொடர்ந்து குழந்தையின் தாய் படுகலன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தின் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் 7 வயது சிறுமி அந்த கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள முற்புதரில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். 

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் தாய்மாமனே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து முற்புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து சிறுமியின் தாய்மாமனான 25 வயது நிரம்பிய தினேஷ் ஜெட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை தினேஷ் ஜெட் ஒப்புக்கொண்டான். இந்த வழக்கு விசாரணை மீரட் நகரில் உள்ள சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தினேஷ் ஜெட்டுக்கு எதிராக 6 நாட்களில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சிறுமியை தினேஷ் ஜெட் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 

அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுமியின் தாய்மாமன் தினேஷ் ஜெட்டுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட 30-வது நாளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கையை திருமணம் செய்ததற்காக நண்பனை கொன்ற அண்ணன்..!
தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை அண்ணன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. செல்போனில் இருப்பிடத்தை அனுப்பி வைத்துவிட்டு திருமணமான பெண் காதலனுடன் தற்கொலை..!
திருமணமான பெண் ஒருவர் காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. ராஜஸ்தானில் புதிதாக 52 பேருக்கு ஒமைக்ரான்..!
ராஜஸ்தானில் புதிதாக 52 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. ரூ.14 லட்சம் மதிப்பு கழுதைகளை காணோம்...! வினோத புகாரால் போலீசாருக்கு தலைவலி
கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்களுக்கு சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
5. பாலியல் வன்கொடுமை: கடிதம் எழுதி வைத்துவிட்டு 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
தன்னை 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.