உத்தரகாண்டில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு


உத்தரகாண்டில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:12 AM GMT (Updated: 23 Oct 2021 10:12 AM GMT)

உத்தரகாண்டில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

உத்தரகாசி,

உத்தரகாண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, இரண்டு மலையேற்ற குழுக்களை சேர்ந்த 22 மலையேற்ற வீரர்கள் புறப்பட்டனர். அக்டோபர் 11ம் தேதி மலையேற்றம் செய்ய கிளம்பினர் சித்குல் பகுதியை அக்டோபர் 19ம் தேதி அடையலாம் என்று திட்டம் போட்டு கிளம்பினர். ஆனால், வழியிலேயே தொலைந்து போயினர்.

இந்நிலையில் தொலைந்து போனவர்களில் 12 பேரின் உடல்கள் லம்காகா மலை வழிப்பாதையின் அருகே மீட்கப்பட்டது. லம்காகா மலை வழிப்பாதையானது, இமாச்சல பிரதேசத்தின் கின்னாவ்ர் மாவட்டத்தில் உள்ள சித்குல் மற்றும் உத்தரகாண்ட்டின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள ஹர்ஷில் ஆகிய பகுதிகளை இணைக்கும்.

இதுவரை மொத்தம் 12 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன 6 பேர் பத்திரமாக மீட்பு, 4 பேரை காணவில்லை. அம்மாநில போலீசார், இந்திய-திபெத் எல்லை போலீசாருடன் சேர்ந்து  தேடுதல் மற்றும்  மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 32 பேரைக் கொண்ட குழு இந்த தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் படை வீரர்கள் நித்தால் டாச் பகுதியில் இருந்து மீட்பு பணியை தொடங்கினர். பனிப்பொழிவால் 105 செண்டிமீட்டர் அளவு வரை  தேங்கியிருந்த பனியை அப்புறப்படுத்தி தேடும் பணியை தொடங்கினர். பிற தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் அந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஒரு இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு பின் ஹெலிகாப்டர் மூலம் உத்தர்காசிக்கு கொண்டு செல்லப்பட்டன.

அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில்,அங்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி   இதுவரை 68 பேர் பேர் பலியாகி உள்ளனர் என்றும் 11 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story