கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர் எச்சரிக்கை


கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும்; மருத்துவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2021 7:43 PM GMT (Updated: 23 Oct 2021 7:43 PM GMT)

கொரோனா பாதிப்பு பண்டிகை காலங்களில் அதிகரிக்க கூடும் என பொதுமக்களுக்கு மருத்துவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.



கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 846 ஆக உள்ளது.  12 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள மருத்துவமனையின் இயக்குனர் சுப்ரஜோதி பவ்மிக் கூறும்போது, பண்டிகை காலம் இன்னும் முடியவில்லை.  இதுபோன்று தொடருமெனில், கடந்த 2020ம் ஆண்டு மே மற்றும் ஜூன் காலங்களில் இருந்த நிலைமைக்கு திரும்பி செல்ல நேரிடும் என நாங்கள் நினைக்கிறோம்.

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டால் பாதிப்பு வராது என அர்த்தமல்ல.  அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  பாதிப்பு விகிதம் அதிரித்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால், சிகிச்சைக்கு சேருவோர் குறைவாக உள்ளனர் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கண்டறியப்பட்டால் இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.




Next Story