நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை: பசவராஜ் பொம்மை


நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை: பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 23 Oct 2021 9:08 PM GMT (Updated: 2021-10-24T02:38:13+05:30)

நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை. எடியூரப்பா எப்போதும் எங்கள் தலைவர் என பசவராஜ் பொம்மை கூறினார்.

ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும் ஒன்றாக சேர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் பசவராஜ் பொம்மையும், எடியூரப்பாவும் பிரிக்க முடியாத ஜோடி எருதுகள் என்று ஹனகல் தொகுதியில் பேசப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ஹனகல்லில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை. எடியூரப்பா எப்போதும் எங்கள் தலைவர். அவரை என்னுடன் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. எடியூரப்பாவின் வழிகாட்டுதல்களை பெற்று ஆட்சி நடத்துவேன். நான் முதல்-மந்திரியாக ஆன பின்பு மாநில வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதிகமாக பேசிக் கொண்டே இருக்க விரும்பவில்லை. சொல்வதை விட, எந்த ஒரு பணிகளையும் செய்து முடித்துவிட்டு பேச விரும்புகிறேன். காங்கிரஸ் கூறி வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக பா.ஜனதா ஆட்சி மீது தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு செயல் மூலம் தக்க பதிலடி கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story