மிசோரம் மாநிலத்தில் மேலும் 572- பேருக்கு கொரோனா


மிசோரம் மாநிலத்தில் மேலும் 572- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Oct 2021 7:11 AM GMT (Updated: 24 Oct 2021 7:11 AM GMT)

மிசோரமில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 9.47 சதவிகிதமாக உள்ளது.

ஐஸ்வால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 572- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட தொற்று பாதிப்பு எண்ணிக்கை 173 - குறைவாக பதிவாகியுள்ளது. மிசோரமில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,17,261- ஆக உயர்ந்துள்ளது.  

மிசோரமில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 9.47 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,037- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் 138 குழந்தைகள் உள்பட 572 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புக்கு மேலும்  7 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 407- ஆக உயர்ந்துள்ளது. 

மிசோரமில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,943- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,258- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  1,07,911- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று மீட்பு விகிதம் 92 சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 0.34 சதவிகிதமாகவும் உள்ளது 

Next Story