ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: மராட்டிய மந்திரி விமர்சனம்


ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால்  போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: மராட்டிய மந்திரி விமர்சனம்
x
தினத்தந்தி 24 Oct 2021 7:48 AM GMT (Updated: 24 Oct 2021 7:48 AM GMT)

ஷாருக்கானுக்கு நெருக்கடி கொடுப்பதே தேசிய போதைப் பொருள் தடுப்பு ஆணையமான என்சிபி முக்கியமாகக் கொண்டுள்ளது என சக்கன் பூஜ்பால் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.  
 தற்போது ஆர்யன்கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  மராட்டிய  மாநில மந்திரி சக்கன் பூஜ்பால் ஷாருக்கான் மட்டும் பாஜகவில் இணைந்தால் போதை மருந்து சர்க்கரையாகிவிடும் என கடுமையாக  மத்திய அரசை சாடியுள்ளார். 

Next Story