புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்ற லாரி விபத்து: ஒருவர் பலி, 30 பேர் காயம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 Oct 2021 9:29 AM GMT (Updated: 24 Oct 2021 9:29 AM GMT)

ஜார்க்கண்டில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். 30 பேர் காயமடைந்தனர்.

ஜார்கண்ட்,
ஜார்கண்டின் சத்பர்வா காவல் நிலையப் பகுதியில் உள்ள கமாரு என்னுமிடத்தை சேர்ந்த தொழிலாளர்கள், உத்தர பிரதேசத்திலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய லாரியில்  ரயில் நிலையம் சென்றனர்.

மேதினிநகர்-ராஞ்சி சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது  எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரியானது திடீரென சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தும்பகடாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 10 பேர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story