தேசிய செய்திகள்

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ் + "||" + Income tax department serves notice to UP rickshaw puller asking him to pay over Rs 3 crore

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த  கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்
அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறி உள்ளனர்.


அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு  கூறி உள்ளனர்.

மதுரா

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர்  பிரதாப் சிங், பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் வசித்து வருகிறார். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் போலீஸ் நிலையத்தில்  புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில்  தான் ஒரு மோசடியாளர் என்று கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால், பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார்  தெரிவித்துள்ளனர்.

வங்கியிலிருந்து பான் அட்டை கேட்டதால், கடந்த மார்ச் மாதம்  பான் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். பிறகு, உண்மையான பான் அட்டைக்குப் பதிலாக வண்ண நிற நகல் கிடைத்துள்ளது. அவருக்கு படிப்பறிவு இல்லாததால், இது நகல் என்பது தெரியாமல் போய்விட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு  கூறி உள்ளனர்.

தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இவரது பான் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்ற வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர்கள் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வணிகம் செய்திருப்பதகாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸ் நிலையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் வன்முறையை தூண்டின - யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அவர்களது ஆட்சி காலத்தில் வன்முறையை தூண்டியதாக யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2. சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை ..!
சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
3. உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள்..!!
உத்தரபிரதேசத்தில் 35 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. "தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும்" அகிலேஷ் யாதவ் அறிமுகம் செய்த வாசனை திரவியம்
சட்டசபை தேர்தல் விரைவில் வருவதை யொட்டி அகிலேஷ் யாதவ் "சமாஜ்வாதி கட்சியின் வாசனை திரவியத்தை" அறிமுகப்படுத்தினார்.
5. உத்தரபிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு
உத்தரபிரதேசத்தில் மேலும் 13 பேருக்கு ‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 79 ஆக உயர்ந்தது.