ராணுவ ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது


ராணுவ ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 3:18 PM GMT (Updated: 25 Oct 2021 3:18 PM GMT)

இந்திய ராணுவ ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காந்திநகர்,

இந்திய எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர் முகமது சஜாத். இவர் காஷ்மீரை சேர்ந்த முகமது குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை அனுப்பியதாக முகமது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த முகமது சஜாத் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையில் சேர்வதற்கு முன்னர் 46 நாட்கள் பாகிஸ்தானில் வசித்துள்ளார். 

அதன்பின்னர் காஷ்மீர் வந்த முகமது இந்திய எல்லைப்பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த அவர், இந்திய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் காந்திநகரில் வைத்து முகமது சஜாத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமது சஜாத்திடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  

Next Story