பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு


பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 Oct 2021 8:57 AM GMT (Updated: 26 Oct 2021 8:57 AM GMT)

உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்ரீநகர், 

துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.  பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். 

இந்த சூழலில் பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்கள் சிலரும்  கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளை சிலர் எடுத்து, காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய் குமாருக்கு அனுப்பினர். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியது மட்டுமின்றி, இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதேபோல், ஜம்மு காஷ்மீரின் கரண் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக விடுதி வார்டன் மற்றும்  கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story