தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இன்று 343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர் + "||" + In Karnataka today 343 people have recovered from corona

கர்நாடகத்தில் இன்று 343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கர்நாடகத்தில் இன்று 343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 8,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,86,553 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,024 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 343 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,39,990 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 8,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. பேருந்து பயணம்,கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; இங்கிலாந்து அறிவிப்பு
இங்கிலாந்தில் பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
3. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரியில் 182 பேருக்கு கொரோனா
கர்நாடக மருத்துவக்கல்லூரியில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
5. தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.