தேசிய செய்திகள்

நீர்மூழ்கி கப்பல் தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி கைது + "||" + Navy officer arrested for leaking submarine information

நீர்மூழ்கி கப்பல் தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி கைது

நீர்மூழ்கி கப்பல் தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி கைது
நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி உட்பட மூன்று பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி:


இந்திய கடற்படையில் உள்ள சிறப்பு வகை நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுதொடர்பான தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. 
அதுபற்றி விசாரிக்க கடற்படை உயர் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணையை விரைவுபடுத்தினர். தற்போது பணியில் உள்ள கமாண்டர் பொறுப்பில் உள்ள கடற்படை அதிகாரிக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. 
இதனையடுத்து மும்பையில் பணியில் இருந்த கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரு கடற்படை அதிகாரிகளை சி.பி.ஐ. நியமனம் செய்தது.  இவர்கள் வாயிலாக நீர்மூழ்கி கப்பல் தகவல் பகிர்வில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே கடற்படை அதிகாரிகளை தங்கள் பக்கம் சாய்த்து, கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசிய தகவல் சேகரிப்போர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  இதன்படி 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் வாயிலாக ரகசிய தகவல்களை அதிகாரிகளிடம் பெற்று பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அல்தாப் ஹுசைன் ஹருண் காஞ்சி என்பவரை குஜராத்தின் கோத்ராவில் போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது - சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.
2. முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது
முகநூல் வழியாக அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
3. முகநூல் மூலம் அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி பெண் கைது
முகநூல் வழியாக அறிமுகமாகி போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
4. மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர் கைது
திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
5. தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது
தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.