தேசிய செய்திகள்

கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு + "||" + Cases of AY.4.2 variant of coronavirus reach 7 in Karnataka

கர்நாடகாவில் புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கர்நாடகாவில்  புதிய வகை ஏ.ஒய் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கர்நாடாவிலும் பரவியுள்ளது.
பெங்களூரு,

 பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்  கர்நாடாவிலும் பரவியுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில்  7 ஆக அதிகரித்துள்ளது. 

பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆணையர் டி ரன்தீப் கூறியதாவது:  கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 3 பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 பேரும் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை தொற்றை கண்காணிக்க மத்திய அரசுடன் இணைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய வகை தொற்று பாதிப்பால் உயிரிழபு எதுவும் ஏற்படவில்லை. எனினும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
2. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள்
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் முன்னேறியுள்ளன
3. கர்நாடகா: மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு
கர்நாடகாவில் மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழந்தது.
4. கர்நாடகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் 20 மாதங்களுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன.
5. கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு
கர்நாடகாவில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 254-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது