டெல்லியில் நவ.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு...!


டெல்லியில் நவ.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு...!
x
தினத்தந்தி 27 Oct 2021 9:44 AM GMT (Updated: 27 Oct 2021 9:44 AM GMT)

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் தற்போது 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அனைத்துப் பள்ளிகளும் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதிகபட்சமாக 50 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட மாட்டார்கள். பள்ளிகள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும், குறைந்தது 98 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இன்றைய டிடிஎம்ஏ கூட்டத்தில் டெல்லியில் சத் பூஜைக்கு அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இது அரசாங்கத்தால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் மிகவும் கடுமையான நெறிமுறைகளுடன் செயல்படுத்தப்படும். கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 


Next Story