தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது + "||" + Number of people receiving corona treatment in Maharashtra reduced less than 20000

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
மராட்டிய மாநிலத்தில் தற்போது 19 ஆயிரத்து 480 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை,

மராட்டியத்தில் நேற்று புதிதாக 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 38 பேர் உயிரிழந்தனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. அதன்படி 19 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் நேற்று மொத்தம் 39 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 420 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நகரில் கடந்த 2 நாட்களாக நோய் பாதிப்பு 300-க்கும் குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது. மும்பையில் மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 621 பேர் பலி....!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பஸ் ஊழியர்கள் இடைநீக்கம்
மராட்டியத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 3 ஆயிரத்து 10 பஸ் ஊழியர்கள் இடைநீக்கம் செய்ய்பட்டனர். இதுவரை 18 ஆயிரம் பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.
3. மராட்டியத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
மராட்டிய மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு மேல்-சபை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.
4. தமிழகத்தில் மேலும் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.