பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு


பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு:  நாளை ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 28 Oct 2021 10:23 AM GMT (Updated: 28 Oct 2021 10:23 AM GMT)

பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

பட்டாசுக்கு தடைகோரிய மனு மற்றும் பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை வந்தது. 

நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனக்கூறினர். மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே நீதிமன்றம் உள்ளது எனக்கூறினர். 

மேலும், விதி மீறல் இல்லை என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கூற்று முற்றிலும் தவறானது, விதி மீறல் தொடர்பான ஆய்வு முடிவுகளும் உள்ளது எனக்கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story