தேசிய செய்திகள்

புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர் நேரில் அஞ்சலி + "||" + Karnataka CM, Governor pays tribute to Puneet Rajkumar's body

புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர் நேரில் அஞ்சலி

புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி, கவர்னர் நேரில் அஞ்சலி
கர்நாடகாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் 1975 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனாக பிறந்த அவர், கடந்த 2002 ஆம் ஆண்டு அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானதால், ரசிகர்களால் அப்பு என அழைக்கப்பட்டார்.  29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ள புனித்,  நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல தளங்களில் பணிபுரிந்தவர்.

இந்த நிலையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமானார்.  மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடல்  கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.  கன்டீரவா மைதானத்தில் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இதேபோன்று, மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் நேரில் அஞ்சலி
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
2. வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெட் தொடரில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
3. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் நேற்று மரணம் அடைந்தார். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருடைய உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
4. 34-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
34-வது நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வருகிற 24-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.
5. 2001-நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மோடி அஞ்சலி
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.