தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா பானர்ஜி தாக்கு + "||" + Modi is becoming more powerful because Congress is indecisive, claims Mamata Banerjee

பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா பானர்ஜி தாக்கு

பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா பானர்ஜி தாக்கு
காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.
பனாஜி

கோவாவில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்,  மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது.  மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். அங்குதான் அவருக்குப் பிரச்சினையே இருக்கிறது. ஆனால், அது நடக்காது.

பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது என கூறினார். 

இந்த நிலையில் கோவாவில்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்  மந்திரியுமான  மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது  அவர் கூறியதாவது:-

"நரேந்திர மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக ஆக்குவதே காங்கிரஸ் கட்சி தான், பா.ஜ.க.வுக்கு விளம்பரம் தேடித் தரும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. 

காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் மோதினர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர்களுக்கு பூச்செண்டு தருவோம்!” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
2. காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. தேசிய அரசியலை குறிவைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிடும் திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் தனது 24-வது ஆண்டு நிறுவன தின வேளையில் தேசிய அரசியலை குறிவைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக விரோத நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது - சோனியா காந்தி
நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய்ய வெறுக்கத்தக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சோனியா காந்தி கூறினார்.