முல்லைப்பெரியாறு அணைக்கு விரைவில் நிர்வாக என்ஜினீயர் நியமனம் - கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி தகவல்


முல்லைப்பெரியாறு அணைக்கு விரைவில் நிர்வாக என்ஜினீயர் நியமனம் - கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2021 8:23 PM GMT (Updated: 2021-11-01T01:53:07+05:30)

முல்லைப்பெரியாறு அணைக்கு விரைவில் நிர்வாக என்ஜினீயர் நியமனம் செய்யப்படும் என கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

மூணாறு, 

கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோசி அகஸ்டின் தொடுபுழாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணைக்கு முழு நேர நிர்வாக என்ஜினீயர் விரைவில் நியமனம் செய்யப்படுவார். அணையில் தற்போது வனத்துறைக்கு சொந்தமான படகுகளை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். நீர்ப்பாசனத்துறை சார்பில் விரைவில் படகு வசதி ஏற்படுத்தப்படும். 

அணை பகுதியை கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த படகு பயன்படுத்தப்படும். குமுளி, வண்டிப்ெபரியார் ஆகிய பகுதிகளில் அணையில் இருந்து தண்ணீ்ர் திறக்கப்படும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story