டென்னிஸ் வீரர் போபண்ணா உள்பட 66 பேருக்கு ‘ராஜ்யோத்சவா’ விருது - கர்நாடக அரசு அறிவிப்பு


டென்னிஸ் வீரர் போபண்ணா உள்பட 66 பேருக்கு ‘ராஜ்யோத்சவா’ விருது - கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 11:12 PM GMT (Updated: 31 Oct 2021 11:12 PM GMT)

கர்நாடகம் உதயமான தினத்தையொட்டி 66 பேருக்கு ‘ராஜ்யோத்சவா’ விருதை மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகம் உதயமான நாளையொட்டி இன்று (திங்கட்கிழமை) கன்னட ‘ராஜ்யோத்சவா’ என்ற பெயரில் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யோத்சவா பெயரில் விருது வழங்கி அரசு கவுரவிக்கிறது. அதே போல் இன்று ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 66 பேருக்கு ராஜ்யோத்சவா விருதை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இலக்கியத்துறை, நாட்டுப்புற கலை, இசை, சிற்பகலை, சமூக சேவை, மருத்துவம், விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம், சுற்றுச்சூழல், பத்திரிகை, நீதித்துறை, நிர்வாகம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 66 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதில் பிரபல டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story