மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு

மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
x
தினத்தந்தி 2 Nov 2021 7:28 AM GMT (Updated: 2 Nov 2021 7:28 AM GMT)

இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 52,39,444 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,  மொத்தம் 1,06,85,71,879 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மாநிலங்களின் கையிருப்பில் 13.76 கோடி  தடுப்பூசிகள் உள்ளது. 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,13,37,12,145 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும், 13,76,86,371 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story