டெல்லியில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் குளிர்: மக்கள் அவதி


டெல்லியில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் குளிர்: மக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Nov 2021 4:31 PM GMT (Updated: 2 Nov 2021 4:31 PM GMT)

டெல்லியில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் குளிரால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டெல்லி,

நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்தபட்ச வெப்பநிலையாக 14-15 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில் தற்போது மேலும் குறைந்துள்ளது.

வெப்பநிலையானது சராசரியை விட 2 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டெல்லியில் நேற்று  மிகவும் குறைவாக (13.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவகியுள்ளது. முன்னதாக, கடந்த 29-ஆம் தேதி  குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாக (14 டிகிரி செல்சியஸ்) சப்தர்ஜங் பகுதியில் பதிவு செய்யப்பட்டது. தற்போது அதைவிட குறைந்துள்ளது.

டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு குறைவான வெப்பநிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story