தேசிய செய்திகள்

வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு + "||" + Website Review: Rahul Gandhi Supports Virat Kohli

வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு

வலைதளங்களில் விமர்சனம்: விராட் கோலிக்கு ராகுல் காந்தி ஆதரவு
விராட் கோலிக்கு எதிராக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்த இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 

அதைத் தொடர்ந்து இந்திய அணியினரும், கேப்டன் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு கோலி கொடுத்த பதிலடிக்கும் பலரும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். 

இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அன்புக்குரிய விராட், இந்த மனிதர்கள் (விமர்சனம் செய்பவர்கள்) யாருடைய அன்பையும் பெறாதவர்கள், வெறுப்பால் நிரம்பியவர்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள். அணியை காத்திடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகல் : விராட் கோலிக்கு நோட்டீஸ் : கங்குலி மறுப்பு..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விராட் கோலி அறிவித்தார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. களத்தில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தான் தெரியும்..! வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது - விராட் கோலி
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் வசப்படுத்தியது
5. நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்: விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது.