தேசிய செய்திகள்

தென்கொரிய வெங்காய பண்ணை வேலைக்கு குவிந்த எம்பிஏ, எம்.டெக் பட்டதாரிகள் + "||" + Techies, MBA grads in Kochi queue up for onion farming job in South Korea

தென்கொரிய வெங்காய பண்ணை வேலைக்கு குவிந்த எம்பிஏ, எம்.டெக் பட்டதாரிகள்

தென்கொரிய வெங்காய பண்ணை வேலைக்கு குவிந்த எம்பிஏ, எம்.டெக் பட்டதாரிகள்
தென்கொரியாவில் வெங்காயப் பண்ணையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம் 

தென்கொரிய அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் வெங்காய பண்ணைக்கு முதற்கட்டமாக 100 பேர் தேர்வு செய்யப்பட்டுகின்றனர்.

தென் கொரியாவில் வெங்காய பண்ணையில் இருக்கும் வேலைக்கு எம்.பி.ஏ மற்றும் எம்.டெக் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர். பட்டதாரிகளாகவும், தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் கிடைக்கும் வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதிலும் வெளிநாடுகளில் அதிக அளவு வேலை இழந்தது கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான்.

இந்த நிலையில் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தென்கொரியாவில் உள்ள வெங்காய பண்ணையில் பணியாற்றுவதற்கு ஆர்வமுடன்
விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு அமைப்பு மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில், நேரில் பதிவு செய்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் தென்கொரியாவில் வெங்காயப் பண்ணையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொச்சியில் இருக்கும் அந்த அலுவலகம் முன்பு குவிந்தனர். எம்.பி.ஏ, எம்.டெக் பட்டதாரிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தென் கொரியாவில் இருக்கும் வெங்காய பண்ணைக்கான வேலைக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து வெளிநாட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு அமைப்பு  நிர்வாக இயக்குனர் அனூப் கூறியதாவது:-

இந்த ஆட்சேர்ப்பு தென் கொரியா அரசாங்க உதவி பெறும் வெங்காய விவசாயத் திட்டத்திற்கானது.  தென் கொரிய நிறுவனம்   100 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை நடத்துவதற்கு ஒப்படைத்தது. எதிர்காலத்தில் மேலும் 1,000 பேரை பணியமர்த்தலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. நாங்கள் 4,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம், மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக எங்கள் இணையதளம் செயலிழந்தது. 

இந்த வேலைக்கு தேவையான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்றாலும், எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. முடித்த இளைஞர்களிடமிருந்தும் விண்ணப்பங்களை பெற்று உள்ளோம். 

தென் கொரிய உணவு கேரளாவிலிருந்து மிகவும் வித்தியாசமானது. பன்றி இறைச்சிதான் அங்கு பிரதானம். தொழிலாளர்களின் தங்குமிடத்தை முதலாளிகள் நிர்வகிக்க மாட்டார்கள் என கூறினார்.

அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,12,500 பெறுவார்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 28 நாட்கள் வேலை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 9 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
நடிகை மீதான தாக்குதல் தொடர்பாக நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
2. ஜோடிகளை மாற்றி உல்லாசம்: மனைவிகளை ஈடுபடுத்த கணவர்களின் வழிமுறை- திடுக்கிடும் தகவல்
மனைவிகளை மாற்றி உல்லாச வழக்கில் குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. ஜோடியை மாற்றும் குடும்ப விழா; மனைவிகளை விற்று சம்பாதிக்கும் ஆண்கள்: அதிர்ச்சி தகவல்கள்
வாட்ஸ் அப் மூலம் குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை விற்று சம்பாதிக்கும் 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
4. வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல்
வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் இளம் மனைவிகளை குறிவைத்து பணம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. சினிமா எடுக்க வரதட்சணை கேட்டு கொடுமை; சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை
கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.