விவசாயிகள் போராட்டத்தின் போது அரியானாவில் பா.ஜ.க எம்.பி. கார் மீது தாக்குதல்


விவசாயிகள் போராட்டத்தின் போது அரியானாவில் பா.ஜ.க எம்.பி. கார் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 Nov 2021 10:37 AM GMT (Updated: 5 Nov 2021 10:37 AM GMT)

விவசாயிகள் போராட்டத்தின் போது அரியானாவில் பா.ஜ.க எம்.பி. ராம் சந்தர் ஜங்ராவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

புதுடெல்லி

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம்  ஹிசார் மாவட்டத்தில் இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி ராம் சந்தர் ஜங்ராவின் காரை கறுப்புக் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள் குழு  தடுத்து உள்ளது. அப்போது   மர்ம நபர்கள் சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து ராம் சந்தர்  எம்.பி கூறியதாவது;

"எனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, நான் வேறொரு விழாவில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் கார் மீது சில மர்மநபர்கள் தடிகளை வீசினர், கார் சேதமடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக அரியானா டிஜிபி மற்றும் எஸ்பியிடம் பேசினேன். குற்றவாளிகளுக்கு எதிராக சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினேன். இது ஒரு தெளிவான கொலை முயற்சி என்று  கூறினார்.

Next Story