தேசிய செய்திகள்

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா + "||" + BJP will win the upcoming Karnataka Assembly elections in 2023: Minister Eshwarappa

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா

வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா
வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
மந்திரி ஈசுவரப்பா பேட்டி

சிவமொக்கா டவுன் குண்டப்பா ஷெட் பகுதியில் உள்ள கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா வீட்டில் கோ பூஜை நடந்தது. இதையடுத்து மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை குறைப்பை மக்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளனர். இதனை பொறுத்து கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஹனகல் சட்டசபை ெதாகுதி இடைதோ்தலில் பா.ஜனதா தோல்வி என்ற ஒரு புல்லை பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்து வருகிறார்.

அமோக வெற்றி பெறும்

சிந்தகியில் பா.ஜனதா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதைபற்றி ஏன் பேசுவது கிடையாது. வரும் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று சவால் விடுக்கிறேன். மேலும் காங்கிரசை முதலும், வட்டியுடன் சேர்த்து வென்று காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜனதாவை தோற்கடியுங்கள் - ரந்தீப் சுர்ஜேவாலா
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜனதாவை தோற்கடியுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
2. கர்நாடக மேல்-சபை தோ்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும்: எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. பஞ்சாப்: 117 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் - அஸ்வினி சர்மா
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று மாநில தலைவர் அஸ்வினி சர்மா அறிவித்துள்ளார்.
4. காங்கிரஸ் ., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா? பசவராஜ் பொம்மைக்கு, சித்தராமையா சவால்
கர்நாடகத்தில் காங்., பா.ஜனதா ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
5. ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்ட பா.ஜ.க.: மெகபூபா முப்தி
பா.ஜனதாவின் கொள்கைகள் ஜம்மு-காஷ்மீரை பல்லாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.