பெங்களூருவில் வரும் 9-ந் தேதி கர்நாடக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


பெங்களூருவில் வரும் 9-ந் தேதி கர்நாடக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2021 11:00 PM GMT (Updated: 6 Nov 2021 11:00 PM GMT)

பெங்களூருவில் வரும் 9-ந் தேதி கர்நாடக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், ஹனகல் தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், இடைத்தோ்தல் குறித்து ஆலோசிக்கவும், தோல்வி குறித்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட தலைவர் அருண்சிங் நாளை (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். 

இதையடுத்து, நாளை பெங்களூருவுக்கு வரும் அருண்சிங் தலைமையில் வருகிற 9-ந் தேதி கர்நாடக மாநில பா.ஜனதாவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திலும் நளின்குமார் கட்டீலை மாற்றுவது குறித்து முக்கிய தலைவர்களுடன், அருண்சிங் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், தலைவர்களின் கருத்துகளை கேட்டு, அதனை பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வௌியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள வலுவான தலைவர் தேவை என பா.ஜனதா மேலிடமும் கருதுவதாக தெரிகிறது. குறிப்பாக நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாளியை தலைவராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் லிம்பாவளி தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். இதன் காரணமாக அவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

Next Story