இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்தது


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்தது
x
தினத்தந்தி 7 Nov 2021 5:13 AM GMT (Updated: 7 Nov 2021 5:13 AM GMT)

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக குறைந்துள்ளது. பலி எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,432- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 526- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,43,55,536 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 845- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,37,49,900 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,60,791 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 28,40,174 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,08,21,66,365 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Story