மாநிலங்களுக்கு 116.58 கோடி தடுப்பூசி வினியோகம்: மத்திய அரசு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Nov 2021 7:35 PM GMT (Updated: 7 Nov 2021 7:35 PM GMT)

மாநிலங்களுக்கு 116.58 கோடி தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம், 100 கோடி ‘டோஸ்’களைக் கடந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை வினியோகித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று வரையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு 116.58 கோடி தடுப்பூசிகளை வினியோகித்துள்ளது.

இவற்றில் பொதுமக்களுக்கு செலுத்தியதுபோக மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 15.77 கோடி தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும் தடுப்பூசிகள் கிடைப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பது முன்கூட்டியே தெரிவிப்பது, அவர்களால் சிறந்த திட்டமிடலை செயல்படுத்துதல் மற்றும் தடுப்பூசி விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story