தேசிய செய்திகள்

மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Man kills himself after murdering wife, children in Kottarakkara

மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கேரளாவில் மனைவி 2 மகன்களை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்லம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ளது நீலஸ்வரம். இங்கு வசிப்பவர் ராஜேந்திரன் (55). ஆட்டோ டிரைவராக இருந்தார்.  இவருடைய மனைவி அனிதா (40). இவர்களது மூத்த மகன் ஆதித்ய ராஜ் (24). இரண்டாவது மகன் அமிருதராஜ்(20)..

அமிர்தராஜ் இந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் மளிகைக்கடைக்கு இன்று காலை பதினோரு மணியாகியும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவரை தேடி கடை உரிமையாளர் ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார். 

அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று கடை உரிமையாளர் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.முதலில் ராஜேந்திரன் வீட்டின் முன்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். பின்பு அருகில் மனைவி இரண்டு மகன்ளும் படுகாயங்களுடன் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்கள். 

அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் வெளியே ஓடிவந்து அக்கம்பக்கத்தினரிடம் விவரம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கொல்லம் மாவட்ட எஸ்பி க்குபுகார் தெரிவித்தார்கள் அவர் உடனடியாக மற்ற போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

 போலீசார் நடத்திய விசாரணையில் கடன்தொல்லை ஒன்றும் இல்லை என்றும்  கணவர் மனைவி இரண்டு மகன்களையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பல மைல் தூரத்தில் இருந்து மொபைல் மூலம் தகவல் கொடுத்த பெண் ; பிடிபட்ட நைட்டி திருடன்
கேரள கோட்டயம் மாவட்டம் தலையோலப்பரம்பு அருகே நள்ளிரவு வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை மொபைல் மூலம் கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்து கைது செய்த பெண்.
2. நடிகை மீதான தாக்குதல்: நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
நடிகை மீதான தாக்குதல் தொடர்பாக நடிகர் திலீப் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
3. ஜோடிகளை மாற்றி உல்லாசம்: மனைவிகளை ஈடுபடுத்த கணவர்களின் வழிமுறை- திடுக்கிடும் தகவல்
மனைவிகளை மாற்றி உல்லாச வழக்கில் குற்றவாளிகள் கோட்டயம், ஆலப்புழா, மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. ஜோடியை மாற்றும் குடும்ப விழா; மனைவிகளை விற்று சம்பாதிக்கும் ஆண்கள்: அதிர்ச்சி தகவல்கள்
வாட்ஸ் அப் மூலம் குடும்ப விழா என்ற பெயரில் மனைவிகளை விற்று சம்பாதிக்கும் 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
5. வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் இளம் மனைவிகளை மயக்கி பணம் பறிக்கும் கும்பல்
வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் இளம் மனைவிகளை குறிவைத்து பணம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.