மகனின் காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை


மகனின் காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த  தந்தை
x
தினத்தந்தி 10 Nov 2021 7:41 AM GMT (Updated: 2021-11-10T13:11:30+05:30)

சிறுமியை ஏமாற்றி கற்பழித்த காதலனின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூர்,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் என் ஆர் பளரா தாலுகா பாலேஹொன்னூர் பகுதியை சேர்ந்த வயது சந்திரப்பா (50).  அவரது 22 வயது  மகன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் 15 வயது சிறுமி 2 நாட்களுக்கு முன் சந்திரப்பா வீட்டுக்கு சென்று காதலன் எங்கே என கேட்டுள்ளார்.

சந்திரப்பா வோ மகன் வெளியே சென்று விட்டதாகவும் அவன் வரும் வரை இங்கே வீட்டிலேயே தங்கவும் எனக் கூறியுள்ளார். இதனை  நம்பி இரண்டு நாட்கள் வீட்டிலிருந்த சிறுமியை பல்வேறு ஆசை வார்த்தை கூறி சந்திரப்பா  பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இது குறித்து சிறுமியும் பெற்றோர்களும் பாலேஹொன்னூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரப்பாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story