மோசடி குற்றவாளியுடன் தொடர்பு போலீஸ் ஐஜி சஸ்பெண்ட்


மோசடி குற்றவாளியுடன் தொடர்பு போலீஸ் ஐஜி சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 10 Nov 2021 11:14 AM GMT (Updated: 10 Nov 2021 11:14 AM GMT)

போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக கேரள போலீஸ் ஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் போலி பழங்கால பொருட்களை விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மான்சன் மாவுங்கல் (52)  கைது செய்யப்பட்டார். இவர் கடந்த பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை சேகரிப்பது போல் நடித்து மக்களிடம் ரூ.10 கோடி வரை மோசடி செய்து உள்ளார்.

தற்போது மான்சன் மாவுங்கலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி)  லட்சுமணாவை கேரள அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கேரள ஐஜியின் சஸ்பெண்ட்  கடிதத்தில் முதல்வர் பினராயி விஜயன் கையெழுத்திட்டு உள்ளார்.

மான்சன் திருவனந்தபுரம் போலீஸ் கிளப்பில் விருந்தினராக தங்கியிருந்து உள்லார். போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு எதற்காகத் தங்கி உள்ளார்.  மான்சன் மவுங்கலின் தொழில் பங்குதாரராக ஆந்திராவைச் சேர்ந்த இடைத்தரகர்களுடன் ஐஜி லட்சுமணா தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஐஜி லட்சுமணா கேரளாவின் மிக மூத்த ஐஜி ஆவார், மேலும் ஜனவரி 1 ஆம் தேதி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக (ஏடிஜிபி) பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளார்.

குற்றப்பிரிவு ஐஜி லட்சுமணா மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story