19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த அவுரங்காபாத் உயிரியல் பூங்கா திறப்பு


19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த அவுரங்காபாத் உயிரியல் பூங்கா திறப்பு
x
தினத்தந்தி 12 Nov 2021 3:31 AM GMT (Updated: 12 Nov 2021 3:31 AM GMT)

கொரோனா காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த அவுரங்காபாத் உயிரியல் பூங்கா தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தில் உள்ள சித்தார்த் உயிரியல் பூங்கா கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்தது. கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முதல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டதாக பூங்கா மேற்பார்வையாளர் சஞ்சய் நந்தன் தெரிவித்தார். இது பற்றி அவர், உயிரியல் பூங்காவில் நுழைய மக்கள் தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

பூங்காவில் பாம்பு மற்றும் புலிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் ஒரே நேரத்தில் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பூங்காவில் 11 புலிகள், 2 சிறுத்தைகள் மற்றும் பல வனவிலங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story