குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: அவசரப்பட விரும்பவில்லை- மத்திய சுகாதார மந்திரி


குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: அவசரப்பட விரும்பவில்லை- மத்திய சுகாதார மந்திரி
x
தினத்தந்தி 12 Nov 2021 10:11 AM GMT (Updated: 12 Nov 2021 10:11 AM GMT)

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதில் அரசாங்கம் அவசரப்பட விரும்பவில்லை என்று மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கொரோனா தடுப்பூசி குறித்து கூறுகையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவில்18 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் குறைந்த பட்சம் முதல் டோஸ் எடுத்துள்ளனர். 

தடுப்பூசிக்குப் பிறகும் கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதை புள்ளிவிபரங்கள் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம். தடுப்பூசிக்குப் பிறகு ஒருவருக்கு கடுமையான கொரோனா தொற்று வராது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 96 சதவீத பாதுகாப்பையும், இரண்டு டோஸ்களும் 98.5 சதவீத பாதுகாப்பையும் தருகின்றன.

உலகில் எங்கும்  பெரிய அளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.  இது சில நாடுகளில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு அவசரம் காட்ட விரும்பவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான எந்த முடிவும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படும், என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

Next Story