இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சீனாவுடன் சமரசம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சீனாவுடன் சமரசம்  - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2021 10:37 AM GMT (Updated: 12 Nov 2021 10:37 AM GMT)

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்கள் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை மறைத்து விட்டன என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இன்று நடைபெற்ற ‘ஜான் ஜக்ரான் அபியான்’ எனும் பயிற்சி  நிகழ்ச்சியில் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டு உரையாடினார். மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் சமீபத்தில் வெளியிட்ட புத்தகம் ஒன்றில், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இந்துத்துவா அமைப்பை ஒப்பிட்டுள்ளார்.  இதனால் இந்துத்துவா குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

 இதனை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்,

அதில் பேசும் போது அவர் கூறியதாவது,

“நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு கொள்கை, காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத கொள்கையை மறைத்து விட்டது.

நம்முடைய கொள்கை எப்போதும் உயிர்ப்புடன் உள்ளது. இந்துயிசம் மற்றும் இந்துத்துவா இவ்விரண்டுக்குமான வேறுபாடு என்ன? இரண்டும் ஒன்றுதானே? அப்படியிருக்க இரண்டுக்கும் ஒரே பெயர் வைத்தால் தான் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.

இந்திய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில்  சீனாவுடன் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சமரசம் செய்துள்ளது. இதனை மன்னிக்க முடியாது.

நம்முடைய கொள்கைகளை நாம் மக்களிடம் வெகுவாக கொண்டு செல்லவில்லை.அதன் காரணமாக பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம்  காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை  மறைத்து விட்டது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story