ஒரே நேரத்தில் 4 இளம்பெண்களுடன் காதல்... ஒன்றாக வந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி


ஒரே நேரத்தில் 4 இளம்பெண்களுடன்  காதல்... ஒன்றாக வந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 Nov 2021 5:28 AM GMT (Updated: 2021-11-13T11:17:08+05:30)

இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்  சுபமோய் கர் ( 25).  கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி கிராமத்தை சேர்ந்த இவர் உள்ளூரில் உள்ள மருத்துக்கடையில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்துள்ளார். உள்ளூரில் நடந்த காளி பூஜை முடிந்து பணிக்கு செல்ல தனது வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். இளைஞர் நான்கு பெண்களிடம் காதல் ரசம் சொட்ட  சொட்ட பேசி வந்ததை எப்படியோ அந்த பெண்கள் தெரிந்துக்கொண்டனர். இதனையடுத்து தங்களை ஏமாற்றிய அந்த இளைஞரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்து நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். நான்கு பெண்களும் அந்த நபரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார் சுபமோய் கர்.  இது பெரிய பிரச்சினையில் முடிந்துவிடும் என அச்சமுற்ற அந்த இளைஞர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  தற்போது அந்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த இளைஞர் மீது இளம்பெண்கள் காவல்நிலையத்தில் புகார் எதும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


Next Story