தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை + "||" + Heavy rains lash Kerala, red alert issued in Ernakulam, Idukki and Thrissur

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
திருவனந்தபுரம், 

கேரளாவில்  எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர் ஆகிய 3-மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளாவின் மத்திய பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. 

தொடர்ந்து கொட்டிவரும் மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.  கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்கு பகுதியில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல்: கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 528- ஆக உயர்வு
கேரளாவில் ஒமைக்ரான் இன்று 48 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
4. டெல்டா, தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
டெல்டா மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.