காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் குளிர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Nov 2021 12:52 PM GMT (Updated: 14 Nov 2021 12:52 PM GMT)

காஷ்மீரில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் நேற்று இரவு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவானது. காஷ்மீரில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தலைநகர் ஸ்ரீநகரில், பாதரசம் உறைபனி வெப்பநிலைக்கும் கீழே சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஸ்ரீநகரில்  வெப்பநிலை நேற்று முந்தைய தினம் 0.1 டிகிரி செல்சியஸ் என்று இருந்த நிலையில், நேற்று மேலும் குறைந்து   0.9 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது.

ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரை செல்வோர் தங்கி செல்லும் பஹல்காம் பகுதியிலும் மைனஸ் 3.5 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இதன்மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகக் குறைந்த செப்பநிலை பதிவான இடமாக பஹல்காம் உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உயரமான ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில்  ‘சில்லாய் காலம்’ எனப்படும் கடும் குளிர்காலம்  40 நாட்கள் நிலவும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் தேதி  இந்த சீசன் ஆரம்பமாகும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போதிலிருந்தே அங்கு  கடும் குளிர்காலம் தொடங்கியுள்ளது.

பனிப்பிரதேசமான குல்மார்க்கில் மைனஸ் 1.8 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. மேலும், இம்மாதம் 20ம் தேதி வரை ஜம்மு-காஷ்மீரில் வறண்ட வானிலை நிலவும் எனவும், மிதமான பனிப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட தகவல்களை அங்குள்ள வானிலை மையம் பதிவிட்டுள்ளது.


Next Story