தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்துக்கு பயணம்; நாளை உத்தரபிரதேசம்..! + "||" + Modi to inaugrate Purvanchal express highway tomorrow

பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்துக்கு பயணம்; நாளை உத்தரபிரதேசம்..!

பிரதமர் மோடி இன்று மத்தியபிரதேசத்துக்கு பயணம்; நாளை உத்தரபிரதேசம்..!
பிரதமர் மோடி பூர்வான்ச்சல் விரைவு சாலையை நாளை திறந்து வைக்க உள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் பயணம் செல்ல உள்ளார். அங்கு பூர்வான்ச்சல் விரைவு சாலையை திறந்து வைக்க உள்ளார். அவர் நாளை மதியம் 1.30 மணியளவில்  இந்த சாலையை திறந்து வைக்கிறார். 

அதனை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். புதிதாக கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் 3.2 கி.மீ நீளத்துக்கு விமானங்கள் தரையிரங்கும் வண்ணம் விமான ஓடுதளமும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் இந்த ஓடுபாதையை பயன்படுத்தி விமானங்கள் தரையிறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்வான்ச்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளம் உடையது. லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கு தொடங்கி உத்தரபிரதேச-பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.

இது 6 வழிச்சாலையாக கட்டமைக்கப் பட்டுள்ளது. வருங்காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூபாய் 22 ஆயிரத்து 500 கோடி செலவில் இந்த நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உத்தரபிரதேச பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த கட்டமைப்பு உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு இன்று சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பழங்குடியின சமூக நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்றார்.

பிரதமர் வருகையையொட்டி, அவருடன் நெருங்கிச் செல்லக்கூடிய கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், போலீசார், அதிகாரிகள், பழங்குடியினர் என சுமார் 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. "அகில இந்திய ஆட்சி பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள்"- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அகில இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2. தமிழகத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் காணொலி காட்சி வழியாக மோடி திறந்துவைத்தார்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றார்.
3. “மோடி கூறியிருந்தால் வழியில் இருந்து விலகி இருப்போம்” - விவசாயிகள் விளக்கம்
பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
4. மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைப்பு..!!
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக, மதுரையில் 12-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5. அதிகரிக்கும் கொரோனா.. அச்சுறுத்தும் ஒமைக்ரான்... எந்தெந்த மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை?
தமிழகம் உள்பட டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.