தேசிய செய்திகள்

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம் + "||" + Congress Slams Centre Over Extension Of CBI, Probe Agency Chiefs' Tenures

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம்

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- காங்கிரஸ் கண்டனம்
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடில்லி, 

மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்தது. இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க வகை செய்யும் அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த நிலையில், சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது,-  

அதிகாரத்தை கைப்பற்ற  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க தனது விஸ்வாசிகளை  மோடி அரசு பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் சோதனை நடத்துவதை விதியாக வைத்துள்ளன.

இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பஞ்சாப் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2. கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி ;பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகா: நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் காங்கிரஸ் 508, பா.ஜ.க. 437, ஜனதா தளம்(எஸ்) மற்றவை 197 கைப்பற்றி உள்ளன.
3. பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை காங்கிரசால் தோற்கடிக்க முடியுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்
ஹலோ எப்.எம்.மில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
4. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்
வெளிநாட்டில் சொத்துக்களை பதுக்கி வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5. காங்கிரசில் இணைகிறாரா ஹர்பஜன் சிங், சித்துவின் டுவிட்டால் பரபரப்பு
ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டி சித்து பதிவிட்டுள்ளார்.