தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு + "||" + Congress's Salman Khurshid's Home Set On Fire: "Left A Calling Card..."

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
நைனிடால்,

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்” எனும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சல்மான் குர்ஷித் இந்து மத கொள்கைகள் மற்றும்  ஐஎஸ்  பயங்கரவாத  இயக்கம், போக்கோஹராம்  பயங்கரவாத  அமைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது. சல்மான் குர்ஷித்தின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக  டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரியும் படத்தை சல்மான் குர்ஷித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராகேஷ் கபில் மற்றும் 20 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா உள்ளாட்சி அமைப்பு தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி ;பா.ஜ.க பின்னடைவு
கர்நாடகா: நகர்ப்புற உள்ளாட்சித் தொகுதிகளில் காங்கிரஸ் 508, பா.ஜ.க. 437, ஜனதா தளம்(எஸ்) மற்றவை 197 கைப்பற்றி உள்ளன.
2. பா.ஜ.க.வின் பெரும்பான்மை வாதத்தை காங்கிரசால் தோற்கடிக்க முடியுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்
ஹலோ எப்.எம்.மில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
3. காங்கிரசில் இணைகிறாரா ஹர்பஜன் சிங், சித்துவின் டுவிட்டால் பரபரப்பு
ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டி சித்து பதிவிட்டுள்ளார்.
4. எளிய மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசாங்கம் மக்களுக்கு செய்தது என்ன? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
5. மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி
மணிப்பூரில் எங்கள் ஆட்சி அமைந்தால் உடனடியாக ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.