தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம் + "||" + President Ramnath Kovind to visit Bangladesh next month

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்
2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் செல்கிறார்.
டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற டிசம்பர் 16-ந்தேதியை வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வெற்றி தினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி முதல்முறையாக வங்காளதேசம் செல்கிறார். 2 நாள் பயணமாக அங்கு செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறும் வெற்றி தின பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். 

கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திரமோடி வங்காளதேசம் சென்று பொன் விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.