பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி


பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 16 Nov 2021 9:46 AM GMT (Updated: 16 Nov 2021 9:46 AM GMT)

பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் கார்வால்கேரியில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.  சுல்தான்பூர் மாவட்டத்தில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் இறங்கி/புறப்படுவதற்கு ஏதுவாக 3.2 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில் இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பிரதமர் பார்வையிட்டார். முன்னதாக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான  போர் விமானத்தில் வந்திறங்கி சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

பின்னர்  பேசிய பிரதமர் மோடி கூறியதாவது;- “ பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே உத்தர பிரதேசத்தை இணைக்கும். பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கு நான் அடிக்கல் நாட்டிய போது, இந்த சாலையில் நான் போர் விமானத்தில் வந்திறங்குவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரிட்டிஷாருக்கு சவால் விடுத்தனர்.

 இந்த நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும்” என்றார். மேலும் எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி,  உத்தர பிரதேசத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட நான், உள்ளூர் மக்களுடன் நல்லுறவை மேம்படுத்திக்கொண்டேன்.  கடந்த  2014- ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, இங்கிருந்த அரசாங்கம் (அகிலேஷ் யாதவ் அரசு) வளர்ச்சி திட்டங்களை எப்படி புறக்கணித்தது என்பதை நினைத்து பார்க்கும் போது எனக்கு வேதனை அளிக்கிறது” என்றார்.


Next Story