தேசிய செய்திகள்

ஜனாதிபதி கோவிந்த் அரியானா வருகை; முதல்-மந்திரி, கவர்னர் வரவேற்பு + "||" + President Govind Haryana visits; CM, Governor Welcome

ஜனாதிபதி கோவிந்த் அரியானா வருகை; முதல்-மந்திரி, கவர்னர் வரவேற்பு

ஜனாதிபதி கோவிந்த் அரியானா வருகை; முதல்-மந்திரி, கவர்னர் வரவேற்பு
அரியானாவுக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

இந்திய குடியரசு தலைவரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 2 நாட்களுக்கு பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவர் பஞ்சாப்பின் சண்டிகாரில் அமைந்துள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் இன்று கலந்து கொள்கிறார்.  இதனை தொடர்ந்து அரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக சண்டிகாருக்கு இன்று வருகை தந்துள்ளார்.  அவரை அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் வரவேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையானார்.
2. 27% இடஒதுக்கீடு செல்லும்; சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்-அமைச்சர் வரவேற்பு
27% இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
3. இந்திய கடலோர காவல் படையில் சேர பொன்னான வாய்ப்பு..!!! விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய கடலோர காவல் படையில் 50 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
4. 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய, வணிகர் சங்கங்களை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
5. பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
பெட்ரோகெமிக்கல் மண்டலம் கைவிடும் அறிவிப்பு: தமிழக அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு.