கொரோனா வைரஸ் தோற்றத்தில்...! நிலத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சி


கொரோனா வைரஸ் தோற்றத்தில்...!  நிலத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சி
x
தினத்தந்தி 16 Nov 2021 11:30 AM GMT (Updated: 16 Nov 2021 11:30 AM GMT)

நிலத்தில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருட்கள் கிடந்துள்ளது.இதை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புவனேஸ்வர்

ஒடிசா மாநிலம் நபரங்கபூர் மாவட்டம்  சர்கூடா கிராமத்தை சேர்ந்தவர் ரபி கிரண். அந்த பகுதியில் நேற்று விவசாய வேலை ஒன்றிற்காக சென்றவர் அங்கு  கொரோனா வடிவ பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நிலத்தில்  கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை ரபி கிரண் அழைத்துள்ளார்.

அந்த விவசாய நிலம் சந்திர பூஜாரி என்பருக்கு சொந்தமான நிலம் ஆகும். அந்த பகுதியில் அவர் கடந்த முறை வெள்ளரிக்காய் விளைய வைத்துள்ளார். இந்த நிலையில் அனைத்து வெள்ளரிக்காய்களையும் அறுவடை செய்த நிலையில் தரையில் ஒரு வெள்ளரிக்காய் மட்டும் புதைந்து கிடந்துள்ளது.இதைத்தான் அங்கு விவசாய பணிக்காக சென்ற ரவி கிரண் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பார்க்க கொரோனா வைரஸ் தோற்றம் போலவே இந்த வெள்ளரிக்காய் இருந்துள்ளது. ஒன்று மட்டுமின்றி அருகிலேயே நிறைய இப்படி வெள்ளரிக்காய் கொரோனா வடிவத்தில் காணப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய போதே அதன் மேக்ரோ தோற்றத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டு இருந்தனர். உருண்டையான பந்து போன்ற வடிவத்தில் முற்கள் கொண்ட அதன் தோற்றத்தை வெளியிட்டு இருந்தனர்.

அந்த விவசாய நிலத்தில் விவசாயிகள் கண்டுபிடித்த வெள்ளரிக்காயும் இதே தோற்றத்தில்தான் காணப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விஷயம் அந்த பகுதி மக்கள் வேடைக்கை பார்க்க கூடிவிட்டனர்.

தற்போது இந்த கொரோனா வைரஸ் வடிவிலான  வெள்லரிக்காய் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வெள்ளரிக்காய் ஏன் இப்படி கொரோனா போல தோற்றம் அளிக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. ஏதாவது பூச்சி கொல்லி மருந்தால் இப்படி ஆகி இருக்கலாம். அல்லது மரபணு மாற்றம் காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story