மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா? - பிரியங்கா காந்தி கண்டனம்


மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா? - பிரியங்கா காந்தி கண்டனம்
x
தினத்தந்தி 16 Nov 2021 8:50 PM GMT (Updated: 16 Nov 2021 8:50 PM GMT)

மோடி, அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை செலவழிப்பதா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்ட அரசுப்பணத்தை மாநில அரசு செலவிடுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தங்கள் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர். அப்போது, மாநில அரசு அவர்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யவில்லை. 

ஆனால், இப்போது மோடி, அமித்ஷா பொதுக்கூட்டங்களுக்கு ஆள் திரட்ட பொது மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பயன்படுத்துகிறது. உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பா.ஜனதா மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, தங்களை காப்பாற்றிக்கொள்ள கோடிகளை வாரி இறைக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story