உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து


உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
x
தினத்தந்தி 17 Nov 2021 4:48 AM GMT (Updated: 17 Nov 2021 4:48 AM GMT)

அலகாபாத் முதல் தீன் தயாள் உபாத்யாயா வரை செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சண்டவுலி,

இன்று காலை உத்தரபிரதேசத்தில் சண்டவுலி ரெயில் நிலையம் அருகே அலகாபாத் முதல் தீன் தயாள் உபாத்யாயா வரை செல்லும் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத்தில் இருந்து தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு நோக்கி சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், காலை 6:40 மணியளவில் சண்டவுலி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த ரெயிலின்  8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

அதிகாரிகள் சீரமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர், பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரெயில்களின் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன் தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு செல்லும் என்று கிழக்கு மத்திய ரெயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் குமார், தெரிவித்துள்ளார்.

Next Story