காற்று மாசுபாடு: அண்டை மாநிலங்களே காரணம் - டெல்லி மந்திரி குற்றச்சாட்டு


காற்று மாசுபாடு: அண்டை மாநிலங்களே காரணம் - டெல்லி மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Nov 2021 5:31 AM GMT (Updated: 17 Nov 2021 5:31 AM GMT)

காற்று மாசு பிரச்சினை டெல்லியை மட்டும் மையமாகக் கொண்டது இல்லை என்று டெல்லி போக்குவரத்துத்துறை மந்திரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது.  ஆறுகளில் நீரும் தெளிவுடன் காணப்பட்டது.  கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருப்பதால், டெல்லி மக்கள் திண்டாடி வருகின்றனர். டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இன்று டெல்லியில் காற்று தர குறியீடு 379 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், காற்று மாசு பிரச்சினை டெல்லியை மட்டும் மையப்படுத்தியது இல்லை என டெல்லி போக்குவரத்துத் துறை மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கைலாஷ் கெலாட், டெல்லி அரசு, காற்று மாசைக் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

எனினும் அண்டை மாநிலங்களும் காற்று மாசுபாட்டை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் காற்று மாசு பிரச்சினை என்பது டெல்லியை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. இது என்.சி.ஆர், அரியானா மற்றும் பிற பக்கத்து மாநிலங்களுடன் தொடர்புடையது. அவர்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story