தேசிய செய்திகள்

அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி + "||" + The nation fought this big battle in unity by bringing all the states together, this is historic in itself PM Narendra Modi

அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

அனைத்து சவால்களையும் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி
அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- 

அனைத்து சவால்களையும் ஜனநாயக முறையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும்.  ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் இந்தியாவில் கொரோனாவை சமாளிக்க முடிந்தது.  இது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசியை கடந்து மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று தோன்றிய ஒன்று, தற்போது சாத்தியமாகி வருகிறது.

வரும் ஆண்டுகளில், இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் அசாதாரண இலக்குகளை அடைய வேண்டும். அனைவரின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும். நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தி புதிய உச்சங்களை நாம் அடைய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

சிம்லாவில் நடைபெறும் மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பலனளிக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
2. பிரதமர் மோடியுடன் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்கள் சந்திப்பு
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் பாஜக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு முக்கியத்தும் பெற்றுள்ளது.
3. திரிபுரா: வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் வழங்குகிறார்
திரிபுராவின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு ₹700 கோடியை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
4. மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் உயிர் தியாகம் என்றும் நினைவில் நிற்கும் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. ராஜஸ்தானில் பேருந்து- டிரக் மோதி பயங்கர விபத்து - 12 பேர் பலி
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்